Polly po-cket
Tamil Full Movie




      பங்குச்சந்தையின் வரலாறு என்ன ?

12ஆம் நூற்றாண்டில், பிரான்சின் கோர்டெடியர்ஸ் டி சேஞ்ச் என்பது வங்கியின் சார்பாக விவசாய மக்களின் கடன்களை நிர்வகிப்பதிலும் சீரமைப்பதிலும் அக்கறை கொண்டிருந்தது. இவர்களும் கடன்களையே வியாபாரம் செய்ததால், இவர்கள் தான் முதல் புரோக்கர்கள். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் புரூக்ஸ் என்ற பொருள் வாணிபர்கள் வேண் டர் பியூர்ஸ் என்ற இடத்தில் கூடினார்கள் என்றொரு அவநம்பிக்கை ஒன்று உண்டு. 1309இல் அவர்கள் "புரூக்ஸ் பியூர்ஸ்" என பெயர் பெற்று,

 அது வரைக்கும் ஒரு சாதாரண கூட்டமாக இருந்ததை நிறுவனப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் ஆண்ட்வெர்பில் வேண் டர் குடும்பத்துக்கு ஒரு கட்டிடம் இருந்துள்ளது, அதில் கூடி செயல்பட்டுள்ளனர் ; வேண்டர் பியூர்சுக்கு ஆண்ட்வெர்ப் இருந்ததால், அக்காலகட வணிகர்கள் வியாபாரத்திற்கான முதன்மை இடமாக அதனை பயன்படுத்தியுள்ளனர். இந்த விஷயம் பிளாண்டர்ஸ் மற்றும் அண்டை நாடுகளுக்கும் பரவி, பின் "பியூர்சன்" விரைவில் கெண்ட் மற்றும் ஆம்ஸ்டர்டேமில் திறக்கப்பட்டது.

13வது நூற்றாண்டின் மத்தியில், வெனீசிய வங்கிகள் அரசாங்க பத்திரங்கள் மூலம் வர்த்தகம் செய்தன. 1351இல் அரசின் நிதி பற்றிய விலைகளைக் குறைக்க பரப்பப்படும் புறளிகளை தண்டித்தது. பைசா, வெரோனா, ஜெனோவா மற்றும் புளோரன்ஸ் ஆகிய நாடுகளின் வங்கிகளும் 14ஆம் நூற்றாண்டின் போது அரசு பத்திரங்களை வைத்து வர்த்தகம் செய்யத் தொடங்கின. இவைகள் அரசனால் ஆளப்படாமல் ஆதிக்கம் கொண்ட குடிமகன்கள் அடங்கிய குழுவால் ஆட்சி செய்யப்பட்ட தன் நகர மாகாணங்கள் என்பதால் இது தான் செய்ய முடிந்தது.

 டச் நாட்டில் பின்னர் கூட்டு பங்கு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன, அவற்றில் பங்குதாரர்கள் தொழில் நிறுவனங்களில் முதலீடூ செய்து அவர்களுக்கான லாப நஷ்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 1602இல், டச்சு கிழக்கு இந்திய கம்பெனி ஆம்ஸ்டர்டேம் பங்குச் சந்தையின் முதல் பங்கை வெளியிட்டது. அது தான் முதன்முதலில் பங்குகளையும் பாண்டுகளையும் வெளியிட்ட நிறுவனமாகும்.

ஆம்ஸ்டர்டேம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (அல்லது ஆம்ஸ்டர்டேம் பியூர்ஸ்) என்பது தான் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் தொடர் வர்த்தகத்தில் மடத்திய முதல் சந்தையாகும். நமக்கு தெரிந்த வகையிலான வர்த்தகங்களான விரைவு விற்பனை, விருப்ப வர்த்தகம், கடன்-பங்கு மாற்றங்கள், வணிகர் வங்கி, கூட்டு நம்பிக்கைகள் மற்றும் மற்ற யூக வியாபாரங்கள், அனைத்திலும் ட்ச்சுக்காரர்கள் சிறந்து விளங்கினர். இப்பொழுது ஒவ்வொரு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும், பங்குச் சந்தைகள் உள்ளன, உலகின் மிகப்பெரிய சந்தைகள் அமெரிக்க நாடுகள், யுனைடட் கிங்டம், ஜப்பான், இந்தியா, சீனா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளன.